LPG நெருக்கடி: வணிக மற்றும் தொழிற்துறை ஒதுக்கீடு 50% ஆக உயர்வு மற்றும் PNG இணைப்புக்கான வழிகாட்டுதல்கள் திரவநிலை பெட்ரோலிய எரிவாயு (LPG) விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக, வணிக மற்றும் தொழிற்துறை LPG ஒதுக்கீட்டை முதலில் 20% அளவிற்கு ஒன்றிய அரசு குறைத்தது. தற்போது, இவ் ஒதுக்கீட்டை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50% அளவிற்கு உயர்த்தியுள்ளது. இந்த ஒட்டுமொத்த 50% ஒதுக்கீட்டில் இருந்து LPG ஒதுக்கீடு பெற தகுதி பெற வேண்டுமாயின், அனைத்து வணிக மற்றும் தொழிற்துறை LPG நுகர்வோர் சம்பந்தப்பட்ட எண்ணெய் விற்பனை நிறுவனங்களிடம் (Oil Marketing Companies) பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், மேற்படி LPG நுகர்வோர், தங்கள் மாவட்டங்களில் உள்ள நகர எரிவாயு விநியோக நிறுவனங்களிடம் PNG இணைப்புக்கு விண்ணப்பித்து, தாங்கள் PNG பெறுவதற்கு தயார் நிலையில் உள்ளதை உறுதிபடுத்த வேண்டும். குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளைப் பெற ஆர்வமுள்ள வணிக மற்றும் தொழில்துறை LPG நுகர்வோர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நகர எரிவாயு விநியோக CGD நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளலாம்: மாவட்டங்கள் CGD நிறுவனம் கட்டணமில்லா தொடர்பு எண் சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம் Torrent Gas 1800-2125-6789 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராமநாதபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் AG&P/ Think Gas 1800-202-2999 திருப்பூர், கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை Adani Total Gas 079-47545252 கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி IOCL 1800-190-7788 திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திண்டுக்கல், கரூர் Mega Engineering 1800-123-1803 திருச்சிராப்பள்ளி, நாமக்கல் IRM Energy 1800-891-1310 ஈரோடு, நீலகிரி BPCL 1800-22-4444 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: திரு. KSR பிரசாத்Torrent Gas Chennai Pvt Ltd.CGD Network மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர்தொடர்பு எண்: +91 63574 69742 அரசு செயலாளர்,தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: செய்தி வெளியீடு எண்: 729