தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க கிராமங்கள் சுற்றுச்சூழல் மற்றும் பறவைகள் பாதுகாப்பிற்காகப் பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து, அமைதியான தீபாவளியைக் கொண்டாடும் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க கிராமங்களாக (Notable Villages in Tamil Nadu), சிவகங்கை மாவட்டத்தில் வேட்டங்குடிப்பட்டி மற்றும் கொல்லுக்குடிப்பட்டி, ஈரோடு மாவட்டத்தில் வ.மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரைவளி, செம்மாண்டம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி மற்றும் கருக்கங்காட்டுவலசு, செங்கல்பட்டு மாவட்டத்தில் வேடந்தாங்கல், திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரம்பூர் மற்றும் இது போன்ற கிராமங்கள் பிற மாவட்டங்களிலும் உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பேணுதல் மற்றும் வன உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் இக்கிராம மக்கள் பின்பற்றி வரும் முன்னுதாரணமான நடைமுறைகள், இயற்கையுடன் இணைந்து வாழ்வதன் அவசியத்தை உணர்த்துகின்றன. இக்கிராமங்கள் ஆற்றிவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் இக்கிராமங்களில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கவும், நாட்டு மர வகைகளை வளர்க்கவும், சூரிய மின்சக்தி தகடுகளை நிறுவவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: செய்தி வெளியீடு எண்: 996 (05.11.2026)